கணங்களின் விழிப்பு
தெரிந்துதான் வாழ வேண்டும்
என்றில்லை
தெரியாமலும் வாழலாம்
கொஞ்சம் தெரிந்தும்
நிறைய தெரியாமலும் வாழலாம்
நிறைய தெரிந்து
கொஞ்சம் தெரியாமலும் வாழலாம்
எப்படிப் பார்த்தாலும்
தெரிந்து வாழ்வது சுமை
தெரியாமல் வாழ்வது அபத்தம்
தெரிந்தும் தெரியாமல் வாழ்வது
குழப்பம்
தெரியாமைக்குள் வாழ்ந்து
விடுவது உத்தமம்
அக வெளியோ
புற வெளியோ
கால வெளியோ
பிரபஞ்ச வெளியோ தெரியாமையில்
ஒரு நாள் நிகழ்ந்துவிடும்
பிறப்பைப் போல இறப்பு
தளிர் ஒன்று துளிர்த்து சருகு
ஒன்று உதிர்ந்து விடுவதைப் போல
தெரியாதது துளிர்த்து தெரிந்தது
உதிர்வது
அவ்வளவு சாதாரணமானதல்ல
அசாதாரணத்தின் கணங்கள் எப்போதும்
நிகழ்ந்து விடுவதுமல்ல
*****
No comments:
Post a Comment