10 Jul 2023

மாறத் தொடங்கும் விளையாட்டுகள்

மாறத் தொடங்கும் விளையாட்டுகள்

தடுத்து விட்டதாக நினைப்பவர்கள்

அப்படியே நினைத்துக் கொள்கிறார்கள்

உபயோகப்படுத்துபவர்கள்

உபயோகப்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள்

தடுப்பதற்குச் சிலரும்

தடுப்பை உடைப்பதற்குச் சிலரும்

எப்போதும் முயன்று கொண்டே இருக்கிறார்கள்

தடுப்பவர்கள் ஒழுக்கத்தை உயர்த்திப் பிடிக்கிறார்கள்

உடைப்பவர்கள் சுதந்திரத்தை உயர்த்திப் பிடிக்கிறார்கள்

தடுப்பவர்களின் வீட்டுக் கழிவறைகள்

சுய மைதுனத்தில் பிறந்த குழந்தைகளைப் பிரசவிக்கின்றன

உடைப்பவர்களின் வீட்டிற்குள் இருந்து

அடிமைகள் ரகசியமாக எட்டிப் பார்க்கிறார்கள்

எது குறித்தும் எந்தக் கவலையுமின்றி

தெருவில் குழந்தைகள்

திருடன் போலீஸ் விளையாட்டை விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்

இந்த முறை

தடுப்பவர் உடைப்பவர் விளையாட்டை விளையாடிக் கொண்டிருங்கள்

என்று கூறிச் செல்கிறேன்

குழந்தைகள் ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்ள ஆரம்பிக்கிறார்கள்

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...