9 Jul 2023

அது

அது

எதுவும் அவ்வளவு விரைவில் நடக்காது

உண்மை தன்னை விட்டு விடாது

அங்கீகாரம் முக்கியமாகாது

பாராட்டுகள் அவசியப்படாது

தண்டவாளத்துத் தொடர்வண்டியைப் போல

எத்தனை பெட்டிகளை இணைத்தாலும்

தொடர்ந்து கொண்டிருக்கும்

போலிகள் தடம் புரளும் தொடர்வண்டிகள்

உண்மையானது புலப்பட்டால்

மேடு பள்ளங்கள் இல்லை

சீறிப் பாயத் தயாராகி விடுகிறது காலம்

*

எதில் இருந்தது

எதிலிருந்த எதை இழந்தேன்

எதை எப்போது செய்தாலும்

அப்படித் தோன்றாதோ

களைப்பையோ சோர்வையோ தராதோ

அதுவே அது

ஏதோ லட்சியப்பட்டதாகவோ

கற்பனையானதாகவோ தோன்றும்

அது அப்படியில்லை ஆனால்

அப்படியொன்று இருக்கிறது

நிபந்தனை என்னவென்றால்

அது அப்படித்தான் இருக்க வேண்டும்

அப்படியே இருக்கவும் செய்கிறது

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...