7 Jul 2023

இழந்த கனவுகள்

இழந்த கனவுகள்

நீங்கள் இருபத்து நான்கு மணி நேரமும் விழித்திருக்கலாம்

விளக்குகளை ஒளிர விடலாம்

அங்காடிகளைத் திறந்து வைக்கலாம்

வாடிக்கையாளர்களை உபசரிக்கலாம்

வாரத்தின் ஏழு நாட்களிலும்

உங்கள் சேவைகளைத் தொடர்ந்து கொண்டிருக்கலாம்

உங்கள் கல்லா பெட்டிகள் நிரம்பிக் கொண்டிருக்கலாம்

உங்கள் சொத்துகள் விரிவடைந்து கொண்டிருக்கலாம்

உங்கள் நாளுக்கு அது குறித்து என்ன

அது இருபத்து நான்கு மணி நேரத்திற்குள் சுருண்டு கொள்கிறது

உங்கள் வாரத்திற்கு அது குறித்து என்ன

அது ஏழு நாட்களுக்குள் சுருண்டு கொள்கிறது

உங்கள் மாதத்திற்கு அது குறித்த என்ன

அது முப்பதுக்குள்ளோ முப்பத்து ஒன்றுக்குள்ளோ சுருண்டு கொள்கிறது

உங்கள் ஆயுளுக்குத்தான் அது குறித்து என்ன

அது முப்பதுக்குள்ளே சுருண்டு கொள்ளலாம்

நாற்பது வரை கூட நீண்டு கொள்ளலாம்

உங்கள் உறங்காத இரவுகளைக் கணக்கில் சேர்த்தால்

நீங்கள் இழந்த அழகிய கனவுகள் இழந்ததுதான்

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...