6 Jul 2023

துளியின் கடல்

துளியின் கடல்

கண்ணீர்த் துளி கடலைப் போலப் பிரவகிக்க

கொந்தளிக்கும் மனதின் அலைகளை

கடற்கரையில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன்

இந்தக் கடலை கடக்க முடியாதோ என நினைக்கும் போது

கடலே என்னை விழுங்கிக் கொள் எனக் கதறுகிறேன்

ஒவ்வொரு துளியாய் விழும் கண்ணின் துளிகள்

மணலில் விழுந்து மறைந்து போய்

மீண்டும் எதிரில் கடலாய்ப் பொங்கிக் கொண்டே இருக்கிறது

என்னில் தொலைந்த கடல்தான் கண்ணின் துளியோ

கண்ணில் துளியில் தொலைந்த கடல்தான்

எதிரில் விரிந்து கிடப்பதோ என மயங்குகையில்

வானத்தின் நீலத்தில் கடல் மயங்குகிறது

கடலின் நீலத்தில் வானம் மயங்குகிறது

ஒன்று இன்னொன்றாய் இன்னொன்று பிறிதொன்றாய்

மாறிக் கொண்டே இருக்கின்றன

கண்ணீர்த் துளிகள் கடலாவதைப் போல

கடல் கண்ணீர்த் துளிகளாய் உருள்வதைப் போல

*****

No comments:

Post a Comment

என்ன வேண்டுமானாலும் செய்யும் அரசியல்!

என்ன வேண்டுமானாலும் செய்யும் அரசியல்! வாழ்க்கையில் என்ன நடக்கும், ஏது நடக்கும் என்று யாருக்காவது புரிகிறதா? அரசியலுக்கு வருவார் என்று நி...