5 Jul 2023

மரணத்தின் பாவக் கணக்கு

மரணத்தின் பாவக் கணக்கு

ஒட்டுவதற்கு இடம் கிடைத்த சந்தோசத்தில்

கண்ணீர் அஞ்சலி போஸ்டரை ஒட்டி விட்டுப் போகிறார்கள்

இல்லாத நேரத்தில் எவன் ஒட்டிப் போனானோ என்று

வீட்டுக்காரி ஒட்டியவர்களைச் சபிக்கத் தொடங்குகிறாள்

பாடையில் படுத்துக் கிடப்பவர்

செத்துப் போனதற்காக நொந்து கொள்கிறார்

தன்னை விசாரிக்கும் சித்திரகுப்தனிடம்

அந்தப் போஸ்டரைக் கிழித்து விட்டுத் திரும்ப

அனுமதி கேட்டுப் பார்க்கிறார்

அனுமதி மறுக்கும் சித்திரகுப்தன்

மரணத்தின் பாவக் கணக்கில்

இதுவும் அடக்கம் என்கிறார்

கொஞ்சம் கூட கருணை இல்லாமல்

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...