4 Jul 2023

இன்று வரை புரியாத ஒன்று

இன்று வரை புரியாத ஒன்று

அடிக்கடி கடையை இடமாற்ற வேண்டியிருக்கிறது

வாடகை தர முடியாமல்

இருக்கும் இடம் பிடிக்காமல்

வாடிக்கையாளர்களின் ஆலோசனையின் பேரில்

கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு

வாஸ்து சரியில்லை என்று

இடமாற்றம் பலன் தரும் என்ற நம்பிக்கையில்

இப்படி கடையை மாற்ற

ஏதோ ஒரு காரணம் வந்து விடுகிறது

கடை மாற்றத்திற்குப் பின்

பழகிய பாதங்கள்

பழைய கடையில் போய் நின்று விடும் போது

இவ்விடம் இயங்கி வந்த கடை…

என்ற வாசகத்தை கண்கள் பார்ப்பது

வேண்டும் என்றா

வேண்டாம் என்றா என்பது மட்டும்

இன்று வரை புரிய மறுக்கின்றது

*****

No comments:

Post a Comment

ஆ. மாதவனின் ‘கிருஷ்ணப் பருந்து’ நாவல் – ஓர் எளிய அறிமுகம்!

ஆ. மாதவனின் ‘கிருஷ்ணப் பருந்து’ நாவல் – ஓர் எளிய அறிமுகம்! மனித மனதின் பூடகம் புரிந்து கொள்ள முடியாதது. வெளித்தோற்றம் சில கண்ணோட்டங்களை மன...