3 Jul 2023

பிள்ளைகள் தொலைந்த திரைவெளி

பிள்ளைகள் தொலைந்த திரைவெளி

இப்போதுள்ள ஆசிரியர்கள்

என்னமாய்ப் பாட்டு பாடுகிறார்கள்

எல்லா புதுபட மெட்டுகளிலும்

பாடங்களைப் பாட்டாய்ப் பாடுகிறார்கள்

புலியூர் சரோஜா போல பிரபுதேவா போல

என்னமாய் நடனம் ஆடுகிறார்கள்

சிவாஜி போல ரஜினி போல கமல் போல

என்னமாய் நடித்துக் காட்டுகிறார்கள்

பிள்ளைகள் பேஸ்புக் நினைப்பிலும்

மீம்ஸ் நினைப்பிலும் உட்கார்ந்திருக்கிறார்கள்

ஆசிரியர்கள் இப்போது

மீம்ஸ் கன்டென்டுகளுடன் பாடம் நடத்தத் தொடங்குகிறார்கள்

பிள்ளைகள் இன்ஸ்டாகிராம் கனவில் மூழ்குகிறார்கள்

ஆசிரியர்கள் இன்ஸ்டாகிராமில் கணக்குகள் தொடங்குகிறார்கள்

பிள்ளைகள் மொபைல் கேமிற்குள் எட்டிப் பார்க்க

ஆசிரியர்களும் கேமிற்குள் நுழைகிறார்கள்

பிள்ளைகள் ஆப்பிற்குள் ஒளிய துவங்கும் போது

கண்களைக் கட்டிக் கொண்டு

ஆசிரியர்களும் ஆப்பிற்குள் நுழைந்து

பிள்ளைகளைத் தேடத் தொடங்குகிறார்கள்

பிள்ளைகள் குறித்த கனவுகளோடு

பெற்றோர்கள் உறங்கிக் கொண்டிருக்க

இணையதளங்கள் ரம்மிகளையும் குட்காக்களையும்

நிர்வாண உலகங்களையும் அள்ளி வீசிக் கொண்டிருக்கின்றன

பிள்ளைகள் தொலைந்த திரைவெளியில்

ஆசிரியர்கள் இன்னும் குழந்தைகளைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள்

*****

No comments:

Post a Comment

ஆ. மாதவனின் ‘கிருஷ்ணப் பருந்து’ நாவல் – ஓர் எளிய அறிமுகம்!

ஆ. மாதவனின் ‘கிருஷ்ணப் பருந்து’ நாவல் – ஓர் எளிய அறிமுகம்! மனித மனதின் பூடகம் புரிந்து கொள்ள முடியாதது. வெளித்தோற்றம் சில கண்ணோட்டங்களை மன...