1 Jul 2023

மரம் சிரித்த பொழுது

மரம் சிரித்த பொழுது

பத்தாண்டுகள் நாயகனாக இருந்து

அடுத்த பத்தாண்டுகள் வில்லனாக இருந்தவனுக்கு

ஏனிந்தப் பெண் தன்னையே பார்க்கிறதென்ற பிரேமை

அது ஒரு பொம்மையெனத் தெளிவதற்கு நாட்களாயின

சாதனையைச் செய்வதை விட

எளிமையாக இருப்பது எவ்வளவு கடினம்

கெஞ்சிக் கிரங்கி விதியின் கரங்களில் இருந்த

வசனத் தாள்களை வாங்கி

விதவிதமானப் பயிற்சி செய்த பின்பு

வித்தியாசமாக நடிப்பது பாத்தியப்பட்டது

சோதனை என்று சொல்ல முடியுமா

அப்போது அப்படி இப்போது இப்படி

இடையில் அப்படிப் பாதி இப்படிப் பாதி

சில வருட இடைவெளியில்

புதிதாக மாறி வந்தவன் சொன்னான்

மரத்தை அவ்வபோது வளர்த்துக் கொண்டே வந்தேன்

மனிதர்கள் வளர்க்காத மரங்கள்

மனிதர்களின் பேச்சைக் கேட்கும் போது சிரித்துக் கொள்கின்றன

*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...