O+ve தக்காளிச் சட்னி
ஜெயிலர் ரஜினியின் போஸ்டர்களில்
ஒன்று
ரத்தம் சொட்ட சொட்ட
வெட்டுக்கத்தியுடன் அமர்ந்திருக்கிறார்
கசாப்புக்கடைகாரரிடம் காணாத
ரத்தம்
என்னத்தைச் சொல்வது
ரத்தம் தக்காளிச் சட்னியாகி
விட்டது
*
மாத்திரை ஏன் வட்டமாக இருக்கிறது
என்கிறாள் மகள்
சதுரமாகவோ
முக்கோணமாகவோ
உருவாக்காமல் இருப்பது என்ன
ஓர் ஆச்சரியம்
அதுவும் விஞ்ஞான வளர்ச்சி
இவ்வளவு உச்சாணிக் கொம்பில்
இருக்கும் இந்தக் காலத்தில்
*
அதான் ஓடிடியிலே பாத்தாச்சே
என்றால்
என்னமோ
ஐசியுவில் சேர்க்கப்பட்ட
உறவினரை உடனடியாகப் பார்க்க
விரும்புவதைப் போல
தியேட்டர்ல பாக்கணும் போல
இருக்குதுங்கறா
மனைவி
*****
No comments:
Post a Comment