12 Jun 2023

மேற்கூரையின் பிரபஞ்சம்

மேற்கூரையின் பிரபஞ்சம்

பால்கனியில் அமர்ந்து

பேருந்துகளின் மேல்பக்கத்தைப் பார்ப்பது

பார்க்கக் கூடாது என்பதற்காகப் படைக்கப்பட்டிருக்கின்ற

முதுகைப் பார்ப்பது போன்ற அனுபவம்

ஒவ்வொரு முதுகிலும் இருக்கும்

வெவ்வேறு அழுக்கைப் போன்றதுதான்

ஒவ்வொரு பேருந்தின் மேற்புறமும்

அதற்குள் ஒரு ஓட்டுநர் ஒரு நடத்துநர் பல பயணியர் இருக்கின்றனர்

முதுகுக்குள் மட்டும் ஏது குறைச்சல்

தண்டுவடம் நுரையீரல் இதயம்

முக்கியமாக வயிறு

மார்பைப் பார்க்கச் சொல்லி பழக்கப்படுத்தியவர்கள்

முதுகைப் பார்ப்பது மூதேவியைப் பார்ப்பதாய்ச் சொல்லியிருக்கிறார்கள்

கூரையில் என்ன இருக்கிறது என்று

வீட்டில் இருப்பவர்கள் இருப்பது போல இருந்து விட முடியுமா

கூரையின் மேல் வந்து அமர்ந்திருக்கும் குருவிக்கு

கூரையில் கொட்டிக் கிடக்கும் உலகை

பார்த்துக் கொண்டே இருக்கலாம்

பேருந்தின் மேற்கூரையில் ஒட்டிக் கிடக்கும் பிரபஞ்சத்தைப் போல

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...