10 Jun 2023

பொருளாதார ஆத்திசூடி

பொருளாதார ஆத்திசூடி

ஔவையார், பாரதியார், பாரதிதாசன் போன்றோர் வாழ்வியலுக்கான ஆத்திசூடியைப் பாடியிருக்கிறார்கள். அந்த ஆத்திசூடியில் பொருளாதாரத்திற்கான பாடங்களும் இருக்கின்றன. இந்தக் காலத்தில் பொருளாதாரத்திற்கென ஓர் ஆத்திசூடி இருந்தால் எப்படியிருக்கும் என்று ஒரு யோசனை வந்த போது, தேவையான அளவோடு அந்த ஆத்திசூடி இப்படியும் இருக்கலாம் என்று தோன்றியது.

அவசரத்துக்கு அவசியம் செய்.

ஆடம்பரம் அகற்று.

எண்ணி எண்ணிச் செயல்படு.

கடனைக் கைவிடு.

கண்டபடி காசை கைவிடேல்.

சிக்கனத்தைச் சிக்கனெப் பிடி.

சேமிப்பு செய்.

நுகர்வு சுருக்கு.

பிள்ளைகளுக்குப் பொருட்பாடம் சொல்.

போதைப் பாதை ஒழி.

முதலீட்டை முறைபடுத்து.

வரவு செலவு திட்டமிடு.

சந்ததிகளுக்குச் சேர்த்து வை.

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...