99% கிடைக்கும் கவிப்புத்தகம்
தமிழ்நாட்டில் யார் கவிஞனாக
இருக்க முடியும்
தமிழ்நாட்டை விடு
எந்த நாட்டிலும் யாரும் யாரையும்
கவிஞராக இருக்க நிர்பந்திப்பதுண்டோ
நீயாக இருக்க ஆசைப்படுகிறாய்
வறுமை வருகிறது என்று பயம்
கொள்கிறாய்
புத்தக விற்பனையில்லை என்று
வியாபார கவலைக் கொள்கிறாய்
நீ கடைசியாக வாங்கிய கவிப்புத்தகம்
ஒன்றின் பெயர் சொல் என்றால்
விழிக்கிறாய்
எழுதிய புத்தகங்களை
எடைக்குப்போட்டால்
தொண்ணூற்று ஒன்பது சதவீதக்
கழிவில்
எடுத்துச் செல்கிறான் பழைய
பேப்பர்காரன்
*****
குருதி வழியும் உடலினின்று நன்றி பொங்கும் கண்கள்
அடிபட்டு நடுரோட்டில் கிடந்தார்
அவசர அவசரமாக
அடிபட்டுக் கிடப்பவரைப் பார்க்க
நேரமில்லாமல்
விரைந்து கொண்டிருந்தார்கள்
அலுவலகத்துக்குச் செல்பவர்கள்
சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த
ஒருவர்
108 க்கு அழைப்பு விடுத்தார்
இப்படியா பீக் ஹவரில் அடிபடுவது
என
அடிபட்டவரைத் திட்டியபடி
நானும் ஆக்ஸிலேட்டரை முறுக்கிக்
கொண்டேன்
அடுத்த முறை சாவகாசப் பொழுதில்
அடிபடுவதாக அடிபட்டவர்
கைகூப்பிக் கொண்டார்
குருதி வழியும் உடலினின்று
நன்றி பொங்கும் கண்களோடு
*****
No comments:
Post a Comment