8 Jun 2023

கவிதை ரோக்கா

மகாதேவன் அறியாத ரகசியம்

இப்போதும் கவிதை எழுதுகிறீர்களா

எழுதாமல் இருக்க முடியுமா

கஷ்டம் வந்தால் கவிதை வந்து விடும்

கஷ்டம் போனால் கவிதை போய் விடும்

எப்படி கவிதை எழுதுகிறீர்கள்

அது வரும் போது

அதுவாகப் புரிந்து விடும்

கவிஞர்களிடம் ஆலோசனை கேட்காதீர்கள்

கவிஞர்களாகி விட்டவர்கள் எழுதுவது

கவிதைகளே இல்லை

சாமர்த்தியமான வரிகளுக்கு

கவிதை என்ற பெயர் எடுபடாது

கற்றுக் கொண்டா பிரசவிக்கின்றன உயிர்கள்

நிகழும் போது நிகழ்ந்து விடும்

போய்க் கொண்டேயிருங்கள்

கவிதைப்பேறு மகாதேவனும் அறியாத ரகசியம்

*****

கவிதை ரோக்கா

என்றாவது கவனித்திருக்கிறாயா

கவிதை அமைதியின்மையின் குரல்

நிம்மதியற்ற வனாந்தரத்தின் முனகல்

பாரதியின் வாழ்க்கை பிடிக்காது

பாரதி போல் கவிதை எழுத விரும்பும்

கவிதா சுகவாசிகள் அநேகரைப் பார்

எழுத முயற்சித்தால் தோற்றுப் போய் விடலாம் என்பதால்

எழுதாமல் இருக்கும் அநேகரைப் பார்

எழுதி முடித்து கவிதை என்று தெரிவதற்காக

பெயருக்கு முன்னர் கவிஞர் என

எழுதிக் கொள்ளும் அநேகரைப் பார்

கொஞ்சம் காசு கையில் இருந்தால்

கொஞ்சம் கடன் வாங்கி

ஒரு கவிதைத் தொகுப்பைப் போட்டுப் பார்

ஒரு கவிப்புத்தகம் விற்பனையாகாத கணத்தில்

வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று

இரண்டில் ஒன்று நடக்கிறது

சிதறு தேங்காய் சமயங்களில்

கணிதத்தின் பின்ன விதிகளுக்குக் கட்டுப்பட்டு

இரு சம பாகங்களாய் உடைவதைப் போல

ஒரு நிஜக் கவிஞர் உருவாகலாம்

அல்லது உருவாகாமல் போகலாம்

கவித்தொகுப்பு என்பது

அந்தக் காலத்தில்

தாள் வியாபாரிக்கும் அச்சு வியாபாரிக்குமான சம்பாஷனை

இந்தக் காலத்தில்

டிடிபிக்கும் பிடிஎப்புக்குமான சம்பாஷனை

சம்பாஷனைப் புரியாமல் எழுதப்படுவதே நிஜக் கவிதை

புரிந்து எழுதப்படுவது கவிதை ரோக்கா

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...