6 Jun 2023

காணாமல் போன சிட்டுக்குருவி

இருந்தவரும் இறந்தவரும்

நேற்று நன்றாக இருந்தவர்

இன்று சாகலாம்

இன்று நன்றாக இருந்தவர்

நாளை சாகலாம்

நாளை நன்றாக இருந்தவர்

அதற்கு அடுத்த நாள் சாகலாம்

அதற்கு அடுத்த நாள் நன்றாக இருந்தவர்

அதற்கும் அடுத்த நாள் சாகலாம்

இப்படித்தான்

ஒரு நாள் நன்றாக இருந்தவர்

ஒரு நாள் சாகலாம்

நாள் கணக்கை எடுத்து விட்டால்

நன்றாக இருந்தவர்

சாகலாம்

நன்றையும் எடுத்து விட்டால்

இருந்தவர்

சாகலாம்

இருப்பையும் எடுத்து விட்டால்

சாகலாம்

சாவையும் எடுத்து விட்டால்

வேறென்ன இருக்கிறது வாழ்க்கையில்

*****

காணாமல் போன சிட்டுக்குருவி

காக்கை குருவி எங்கள் ஜாதி

அரிசியை அள்ளிப் போட்ட பின்தான்

பாரதி கவனித்தார்

சிட்டுக்குருவியைக் காணவில்லை

*****

விஷேச அனுமதிகள்

இரு சக்கர வாகனத்தில்

இருவருக்கு மட்டும் அனுமதி

ஆறு சக்கர பேருந்தில்

அறுபது வரைக்கும் அனுமதி

அரசுப் பேருந்துகளில்

எண்பது நூற்று இருபது வரை அனுமதி

தனியார்ப் பேருந்துகளில்

நூற்று ஐம்பது நூற்று எண்பது வரை அனுமதி

தடுத்து நிறுத்தப் படுவது என்னவோ

மூவர் செல்லும் இரு சக்கர வாகனம்

*****

No comments:

Post a Comment

ஏன் இந்த மனிதச் சமூகத்தைப் பிடிக்காமல் போகிறது?

ஏன் இந்த மனிதச் சமூகத்தைப் பிடிக்காமல் போகிறது? பல நேரங்களில் மனிதச் சமூகத்தைப் பிடிக்காமல் போய் விடுகிறது. அப்படியானால், மாட்டுச் சமூகம...