2 Jun 2023

உன் நிஜத்திற்காக நடிப்பவர்

மந்திரம் பொய்ப்பதில்லை

அப்பா சொல் மிக்க

மந்திரம் உண்டோ

உழைத்து முன்னேறுவதெல்லாம்

கஷ்டம்

பேசாமல் ஒரு கவர்ன்மென்ட் வேலைக்குப்

போ

*****

கூலிங் பாய்ண்ட்

பெற்ற வயிறு

குளிராமலா போய் விடும்

முதியோர் இல்லத்தில் செத்தவளை

ஊர் பார்க்க

உன் இல்லத்திற்குக் கொண்டு வந்து

கூலர் பாக்ஸில் வைத்துவிடு

அத்துடன்

ஆண்டுக்கொரு முறை மறக்காது

திதி கொடுத்து விடு

*****

உன் நிஜத்திற்காக நடிப்பவர்

முன்பு ரஜினி படம் வந்த போது

மகிழ்ந்தாய்

இப்போது ரஜினி படம் வரும் போதும்

மகிழ்கிறாய்

இன்னும் எத்தனை ரஜினி படங்கள் வந்தாலும்

மகிழ்வாய்

உன்னை மகிழ்விக்க

அவர் இன்னும் எத்தனை படங்களில்

வந்து கொண்டிருக்க வேண்டும்

உனக்காக அவர் நடித்துக் கொண்டிருக்கிறார்

அவருக்கு நீ நிஜமாக இருக்கிறாய்

உன் நிஜத்திற்காக அவர் நடித்துக் கொண்டிருக்கிறார்

அவர் நிஜம் பறிபோய்க் கொண்டே இருக்கிறது

*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...