மறதிகளின் ஞாபகக் குறிப்புகள்
பிறகு மறந்து விடுமோ என்று
ஞாபகம் வரும் போதே செய்து
கொள்ள வேண்டியதாகிறது
மதிய உணவைக் காலையில்
இரவு தூக்கத்தைப் பகலில்
கனவு காண்பதை விழிப்பில்
மலம் கழிப்பதைப் பொதுவிடத்தில்
சுய மைதுனத்தைச் சுதந்திர
வெளியில்
கவிதையைக் கழிவறையில்
சுவாசத்தைப் பிணம் பார்க்கும்
பொழுதில்
வாந்தியைப்பார்த்ததும் குவார்ட்டரைக்
கவிழ்த்து
மரத்தைப் பார்த்ததும் கிளையேற்றம்
*****
அசலும் நகலும் ஒன்றாகும் வாழ்க்கை
ஒரு நகலான நிறைவு வந்து
வாழ்க்கையைப் பற்றிய கேள்வியை
நசுக்கி விடுகிறது
விசாரணையை அர்த்தமிழக்க செய்து
விடுகிறது
நிறைவின்மையோ துக்கமோ வேதனையோ
விசாரணையைத் துரிதப்படுத்தி
கேள்விகளை அதிகப்படுத்தி
அலசான வாழ்க்கையில் ஒன்றுமில்லை
என்கிறது
ஆனாலும் அப்படியா என்றால்
அப்படியுமில்லை என்று
தேவைகள் உந்துகின்றன
ஆசைககள் தூண்டுகின்றன
எதிர்பார்ப்புகள் மிகைபடுத்துகின்றன
அடைவுக்குப் பின் வெறுமை
சூழ்கிறது
எங்கேயோ இருப்பதான தோற்றம்
தருகிறது நிம்மதி
அசலும் நகலும் ஒன்றென்பது
போல முடிகிறது வாழ்க்கை
*****
No comments:
Post a Comment