சைபர் வீதி வாழ்க்கை
RIP யும் ஸ்மைலியையும்
தட்டி விட்டு கடக்கின்றன
துக்கங்கள்
காப்பி பேஸ்டில் லட்சம் கோடியாகத்
தயார் நிலையில் இருக்கின்றன
வாழ்த்துகள்
அடடே என அசத்த நினைவகத்தில்
தேங்கிக் கிடக்கின்றன
எப்போதோ எவரெவரோ அனுப்பிய
பகிர்வுகள்
ஏகப்பட்ட படங்களை டௌன்லோட்
செய்து
எதையும் பார்க்க முடியாமல்
ஓடுகின்றன நேரங்கள்
எப்போ பார்த்தாலும் சீரியல்தானா
என
அம்மாவிடம் அலுத்துக் கொண்டு
வெப் சீரிஸ்களில் மூழ்குகின்றன
அறிவுரைகள்
வாட்ஸாப் வராமல் போவதற்கு
இன்ஸ்டாவில் பிஸியாக இருக்கின்றன
காரணங்கள்
விஷேசங்கள் வந்து விட்டால்
பேஸ்புக்கிலும் டிவிட்டரிலும்
வாழ்த்து சொல்ல
எப்போதும் தயாராக இருக்கின்றன
4K இதயங்கள்
மெய் நிகர் சைபர் வீதியில்
எந்தக் குறையும் இல்லாமல்
ஒட்டும் உறவும் இல்லாமல்
நிஜமாகச் சைபர் வீதியில்
ஓடிக் கொண்டிருக்கிறது வாழ்க்கை
*****
பாதியில் முடிந்து விடும் கடைசி
கடைசி தருணத்தில் சொட்டும்
அற்புத தருணங்களை ருசிப்பதற்குள்
மண்டையைப் போட்டு விடுகிறது
வாழ்க்கை
மரத்தை வைத்தவர் கனியைப்
புசிப்பதற்குள்
மரணித்து விடுவதைப் போல
இதுவரை எழுதப்பட்ட அத்தியாயங்களினின்று
அங்கொன்றும் இங்கொன்றுமாக
பிடுங்கிப் போட்டபடி
சாதனை விளக்கக் கூட்டத்தைப்
போல
தொகுக்க வேண்டியிருக்கிறது
கடைசி அத்தியாயத்தை
பாதியில் நின்று விட்ட வண்டியை
வீடு வரை இழுத்து வராமல்
நிறைவடைந்து விடுமோ பயணம்
*****
No comments:
Post a Comment