13 Apr 2023

பதிவகங்களில் பதிந்து விட்ட காலப்பிரதி

பதிவகங்களில் பதிந்து விட்ட காலப்பிரதி

அப்போதெல்லாம் அப்படித்தான்

புகைப்படம் எடுத்திருக்கிறார்கள்

பின்னே பூக்கள் பூடை சூழ

முன்னே முகம் காட்டி

முக அழகு பிரமாதமாக இல்லாவிட்டாலும்

பூக்களின் அழகு பிரமிக்க செய்து விடாதா

இப்போது விபரீதமான பின்னணியோடு

சுயபடம் எடுப்பதைப் போல

அப்போது வாய்த்தது அதுவாகவும் இருக்கலாம்

ஒரு படம் எடுத்துக் கொள்ளும் ஆசை

எல்லாருக்கும் இருந்திருக்கக் கூடும்

ஒரு சிலருக்கு வாய்த்தது

பலருக்கு வாய்க்காமல் போயிருக்கக் கூடும்

இப்போது பார்க்கையில்

அப்படி ஒரு படம் தேவையோ

காலப்பதிவிற்கு நானே ஓர் ஆவணத்தைக்

காட்டிக் கொடுத்து விட்டேனோ என்று

அழுது புலம்பத் தோன்றுகிறது

பலரது அலைபேசி கணினி பதிவகங்களில்

தேங்கி விட்ட அப்படத்தை

வற்றடிக்க ஏதேனும் வழியுமுண்டோ

*****

குளிர்காலக் குறிப்புகள்

மார்கழிப் பனி

சிவப்புக் கம்பளி

காதைக் கிழிக்கும் கோயில் ஒலிப்பெருக்கி

வாசலின் வண்ணக்கோலம்

சூடான மிளகுப் பொங்கல்

வயதாகி விட்டதால்

எப்போதாவது வந்து போகும் சங்கூதி

நினைவுகள் ஒவ்வொன்றும் மார்கழியில்

உறைந்து போகின்ற பனித்துளிகளைப் போல

திரவத்தினின்று இறுகி திடமாகின்றன

அவ்வளவு விசயங்கள் இருந்த பிரக்ஞை இல்லாமல்

இப்போது ஒவ்வொரு மார்கழியும்

இரண்டாவது கியரில் ஆரம்பித்து

மூன்றாவது நான்காவது கியரில்

ஓடிக் கொண்டிருக்கிறது

குத்துப் பாடலிற்கு நேர்ந்து விட்ட

மெல்லிசைப் பாடகர்களைப் போல

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...