17 Mar 2023

படிப்போன் எனக் கேட்ட தாய்

அன்பே நீ

அன்புதான் நீ

நீதான் அன்பு என்கிறேன்

காதல் கவிதை என்கிறார்கள்

திருமூலர் சொன்னால்

திருமந்திரம் என்கிறார்கள்

அதனாலென்ன

அப்படியே இருந்து விட்டுப் போகட்டும்

அதுவும் இதுவும்

*****

மிச்சமது போதுமெனக்கு

எல்லாரும் புகழ்ந்து விட்டுப் போன பிறகு

உன் வசவுகள் கொஞ்சம் மிச்சமிருக்கிறது

அது போதும் எனக்கு

*****

படிப்போன் எனக் கேட்ட தாய்

பையன் எல்.கே.ஜி. படிக்கிறான்

தாயின் முகத்தில் பெருமிதம்

இன்னும் அவன்

யு.கே.ஜி.

1

2

3

4

5

… … …

பத்து

பதினொன்று

பனிரெண்டு

பட்டம் பல

படிக்க வேண்டும்

அதற்குள்

வடிந்து விடும்

பெருமிதம்

*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...