15 Mar 2023

நிஷ்காமிய யோக நிஷ்டைக்காரர்கள்

அடக்கல்

மண்ணில் புதைந்தால்

மேல்நோக்கியும் வளரலாம்

கீழ்நோக்கியும் வளரலாம் என்கிறார்கள்

ஒன்றை கிளை என்கிறார்கள்

மற்றொன்றை வேர் என்கிறார்கள்

மண்ணில் புதையும் காலம் வரை

ஆசையை அடக்கிக் காத்திருக்கத்தான் வேண்டும்

ஓட்டுக்குள் இருக்கும் விதை

*****

கேளாச் சமூகம்

அவசரமாக ஒரு யூனிட்

ஏ பாசிட்டிவ் தேவை என்ற செய்தி வருகிறது

நான் தயார் என்று செய்தி அனுப்பினால்

அது ஐந்து வருடங்களாக

உலா வரும் செய்தி என்கிறார்கள்

ஐந்து வருடங்களில்

தயார் என்று சொல்லி

ஏமாந்தவர்களின் எண்ணிக்கை

ஐந்துதான் என்கிறார்கள்

இரத்தத்தைப் பார்த்தும் பதறாத சமூகம்

இரத்தம் கேட்பதைப் பார்த்தா பதறப் போகிறது

*****

நிஷ்காமிய யோக நிஷ்டைக்காரர்கள்

ரொம்ப பெரிய கவிதை

ஸ்க்ரோல் பண்ணி கடந்து விட்டேன்

கட்டுரைகள் என்றால்

ஸ்க்ரோல் பண்ணவும் அலுப்பாக இருக்கிறது

கஷ்டப்படாமல் எழுதியிருக்க வேண்டும்

உட்கார்ந்து எழுதிய பொறுமைசாலிகள்

எழுதுபவர்கள் அதிகரித்துக் கொண்டிருக்கிறார்கள்

படிப்பவர்கள் குறைந்து கொண்டிருக்கிறார்கள்

ஒருவர் எழுதியதைப் படிக்கும் மற்றோர் எழுதுபவர்

ரொம்பவே அரிதாகிக் கொண்டிருக்கிறார்கள்

படிப்பவர்கள் இல்லை என்று பார்க்காது

எழுதிக் குவிப்பவர்கள்

நிஷ்காமிய யோக நிஷ்டைக்காரர்கள்

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...