14 Mar 2023

மாறாதது என்றும் மாறாதது

அது ஒரு கவலை

செத்தொழி

யாருக்கு என்ன கவலை

இரங்கல் கூட்டம் நடத்தி

பேச வைப்பாய் என்பதுதான்

கவலையாக இருக்கிறது

*****

எழுமின் விழிமின்

அதிகாலையில் எல்லாம் விழித்துக் கொள்கின்றன

உறங்குகிறவனுமா என்றால்

உறங்குகிறவனும்தான்

கனவுகளில் விழித்துக் கொள்ளா விட்டால்

உறங்குவதெப்படி

எதையேனும் எழுப்பாத அதிகாலை உண்டா என்ன

*****

பேசாப் பொருள்

நேற்று முந்தைய தினம்

நன்றாகப் பேசிக் கொண்டிருந்தார்

நேற்று இறந்து விட்டார்

என்ன இருந்தாலும்

அவர் இப்படிச் செய்திருக்கக் கூடாது

இன்றைய தினம்

பேசாப் பொருளைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்

*****

மாறாதது என்றும் மாறாதது

ஊர் மாறியிருப்பேன்

வீடு மாறியிருப்பேன்

என்று நினைத்துக் கொள்பவர்கள் அதிகம்

நீங்கள்தான் ஊர் மாறியிருக்கிறீர்கள்

வீடு மாறியிருக்கிறீர்கள் என்பதை

அடிக்கடி நினைவு படுத்த வேண்டியிருக்கிறது

நினைவுகள் மீள

ஓர் ஆழ்ந்த பெருமுச்சோடு

வந்தால் வருகிறேன் என்கிறார்கள்

வராமல் இருந்து விடாதீர்கள் என்பதை

நினைவுபடுத்தி விட்டுக் கிளம்புகிறேன்

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...