13 Mar 2023

மூன்று தாய்மார்கள்

மூன்று தாய்மார்கள்

நற்றாய் என்று ஒருத்தி இருந்திருக்கிறாள்

செவிலித்தாய் என்று இன்னொருத்தி இருந்திருக்கிறாள்

அந்த இருவருக்கும் தெரியுமா

வாடகைத்தாய் என்று மூன்றாவது ஒருத்தி இருப்பது

*****

எனக்கு மட்டும் வரும் கோபம்

செத்தவர் வீட்டில்

எல்லாரும் அழுது கொண்டிருக்கிறார்கள்

செத்தவரைத் தவிர

இப்படியா அழ வைத்து விட்டு

பேசாமல் படுத்துக் கிடப்பது

என் ஒருவனுக்கு மட்டும்தான் கோபம்

மற்றவர்கள் எல்லாம்

இன்னும் அழுது கொண்டிருக்கிறார்கள்

*****

அப்படியா நல்லது

நான் உன்னைக் காதலிக்கிறேன்

யார் வேண்டாம் என்று சொன்னது

அதற்காக நான் உன்னைக் காதலிக்க வேண்டும்

என்று எதிர்பார்க்காதே

எதிர்பார்ப்பது நல்ல காதலாகாது

*****

நினைப்பது மறந்து விடுகிறது

இந்த முகவரி தெரியுமா

என்று கேட்பவர்களிடம்

சரியாகச் சொல்லி அனுப்பி விடுகிறேன்

சொந்த வீட்டின் முகவரி

அடிக்கடி மறந்து போய் விடுகிறது

நேட்டிவிட்டி அம்னீசியா என்று

ஏதோ ஒன்று இருக்க வேண்டும்

மருத்துவரைச் சந்திக்கும் போதெல்லாம்

கேட்க வேண்டும் என்று நினைத்து நினைத்து

மறந்து போய் விடுகிறது

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...