9 Mar 2023

திருப்தியின் இருக்கைகள்

நண்பர்களின் வருகை

நண்பர் இறந்து நாளாகி விட்டது

இன்னும்

என்னனென்னவோ

கனவில் தினம் வந்து பேசிக் கொண்டிருக்கிறார்

என்றாவது ஒரு நாள்

கனவிலும் வந்து போகாமல் இறந்து போவார்

அப்போது இன்னொரு நண்பர் இறந்து

கனவில் வந்து போகத் தொடங்குவார்

கனவில் வந்துப் போவதற்காகவா

என் நண்பர்களே இறந்து போகிறீர்கள்

என்று கேட்டால்

கனவில் வந்துப் போகும் நண்பர்கள்

சிரித்துக் கொள்கிறார்கள்

நண்பர்கள் இறந்தால் அழுவது நின்று

நானும் சிரித்துக் கொள்கிறேன்

*****

திருப்தியின் இருக்கைகள்

வரிசையாக ஒவ்வொரு இருக்கையாக

அமர்ந்து பார்க்கிறார்

எந்த இருக்கையும் திருப்திபடுவதாகத் தோன்றாமல் போக

திபுதிபுவென வந்துப் புகும் கூட்டம்

திருப்திபடா இருக்கை ஒன்றில்

அமர வைக்கிறது

நல்லவேளை நடுவில் ஒரு இருக்கை கிடைத்ததென

இப்போது திருப்தி பட்டுக் கொள்கிறார்

மேலும் மேலும் கூட்டம் வர

அமர்ந்திருக்கும் இருக்கையின் திருப்தி

அதிகமாகிக் கொண்டே போகிறது

இறங்கும் நிறுத்தம் வரும் போது

திருப்தி தந்த இருக்கையை விட்டு

திரும்பிப் பாராமல் கூட

இறங்கிப் போகிறார்

இன்னொருவர் திருப்தியுடன் அமர்ந்து கொள்கிறார்

இறங்கும் வரை திருப்தியை அனுபவித்துக் கொள்ளும் ஆசையில்

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...