8 Mar 2023

அடைத்து வைக்கும் கதவுகள்

பிரக்ஞையற்றதன் இயக்கம்

ஏறுகிறார்கள்

இறங்குகிறார்கள்

ஏறுவதோ இறங்குவதோ

எந்த நோக்கமில்லாமல்

மாடிப்படி அங்கேயே இருக்கிறது

நோக்கத்தை வரிந்து கட்டிக் கொள்பவர்கள்

ஏறிக் கொண்டும் இறங்கிக் கொண்டும் இருக்கிறார்கள்

*****

எறிதலின் ரத்தம்

தம் மகள்களின் கால்களில்

குத்தப் போவது தெரியாது

குவார்ட்டர் பாட்டில்களை

வீசி எறிகிறார்கள்

குடிகார தகப்பன்மார்கள்

*****

அடைத்து வைக்கும் கதவுகள்

கதவு எவ்வளவு விசயங்களை

அடைத்து வைத்திருக்கிறது என

ஆச்சரியப்படுபவர்

கதவுக்கு வெளியே இருக்கும்

ஆச்சரியங்களைக் கவனிக்காமல்

கதவுக்குள் அடைந்து கிடக்கும்

ஆச்சரியங்களைக் கவனிக்கிறார்

கதவுக்குள் அடைந்து

விட்டு விடுதலையாகும் பொழுதில்

ஆச்சரியங்கள் அடைந்து கிடப்பது

உள்ளேயல்ல வெளியே என்பது

புலப்படக் கூடும்

எல்லாரும் நினைப்பது போல

எல்லாரையும் அப்படி விடுதலை செய்து விடுவதில்லை

கதவுகள்

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...