3 Mar 2023

சூட்சமங்களின் ரகசியங்கள்

சூட்சமங்களின் ரகசியங்கள்

எந்த மழை

எந்த வெள்ளத்தைக் கொண்டு வருமோ

எந்தக் காற்று

புயல் காற்றாய் மாறுமோ

எந்த அதிர்வு

நில அதிர்வாய் ஆகுமோ

எந்தப் பொறி

காட்டுத்தீயாய்க் கனலுமோ

எந்த மின்னல்

பூமியில் இறங்குமோ

கணிப்பவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்

ஜோதிடர்கள் கணக்கு எல்லையற்றது

அனுபவஸ்தர்கள் வாக்கு ஆயிரம்

வருவது போல

விலகிப் போனவை அநேகம்

எதேச்சையாய் வந்து விடும் ஒன்றுக்காக

எல்லா கணக்கும்

எல்லா சூட்சமங்களும்

எல்லா சடங்குகளும்

எல்லா சம்பிரதாயங்களும்

எப்போதோ வரப் போகும் ஒன்றுக்காக

அல்லது

எப்போதுமே வரப் போகாத ஒன்றுக்காக

*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...