1 Mar 2023

ஓரஞ்சாரத்தில் கழியும் ஒரு யுகம்

ஓரஞ்சாரத்தில் கழியும் ஒரு யுகம்

பத்துப் பனிரெண்டு கடைகள் வந்திருந்தால்

கிராமத்தை விட்டுப் போயிருக்க மாட்டாய்

வயலில் விளைந்து விடுகிறது நெல்

வரப்புகளில் விளைந்துவிடுகின்றன கறி காய்கள்

நாக்குச் செத்துப் போனது தெரிந்தால்

முச்சந்தி முனியப்பன் படையல் போட்டு விடுகிறான்

இஷ்டப்படி கூத்தடித்துக் கும்மாளம் கொட்ட

குடித்து விட்டுச் சீட்டுக் கச்சேரி செய்ய

திருவிழா வந்துவிடுகிறது

அன்றொரு நாள் பத்துப் பனிரெண்டு என்ன

முப்பது நாற்பது கடைகள்

வரிசை கட்டி நீள்கின்றன

காஞ்சிபுரம் சேலையைத் தலையில் கட்டிக் கொண்டு

வியாபாரி வீடு தேடி வருகிறான்

பஞ்சு மிட்டாய்க்காரனும் பால்காரனும் தயிர்க்காரியும்

ஆயி சௌக்கியமா அய்யா சௌக்கியமா

என்று விசாரித்த பின்னே

பண்டம் கொடுத்து பண்டம் வாங்கிக் கொள்கிறார்கள்

பிறகேன் இங்கு பத்து பனிரெண்டு கடைகள்

ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் இருக்கும்

ஒத்த கடையில் பீடியோ சுருட்டோ வாங்கி

பற்ற வைத்துக் கொண்டு

ஓரஞ் சாரம் போனால் ஒரு யுகம் போனது மாதிரி

*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...