28 Feb 2023

பரிகாசச் சிரிப்பு

பரிகாசச் சிரிப்பு

நிறைய சொத்து பத்து சம்பத்துகள்

அவை என்னைப் பார்த்துக் கொண்டனவா

நான் அவற்றைப் பார்த்துக் கொண்டேனா

என்பது முக்கியமாகாது

நான் அவற்றைப் பார்த்துக் கொண்டதும்

அவை என்னைப் பார்த்துக் கொண்டதும்

மாறி மாறி நிகழ்ந்து கொண்டிருந்தன

உறவுகள் வந்தார்கள் போனார்கள்

நண்பர்கள் வந்தார்கள் அளவாளவினார்கள்

சுற்றங்கள் சூழ இருந்தார்கள்

யாரையும் சிந்தாமல் சிதறாமல்

சேமித்துக் கொடுத்தவை

சொத்து பத்து சம்பத்துகள்

எவரையும் விலக்கி விட முடியாத

பிணைப்பிற்குள் வைத்திருந்ததைப் பார்த்த பின்

அவை முன்

மண்டியிட்டு கண்ணீர் உகுத்தேன்

எம்மைப் பார்த்துக் கொள்ளும் வரை

உம்மைப் பார்த்துக் கொள்ள வேண்டியது

நீ இதுவரை வணங்காத கடவுளின் கட்டளை என்றன

முதன் முறையாக வணங்காத கடவுளின் பக்கம் நோக்கிய போது

அப்படி ஏதும் இருக்கின்றனவா என்பது போல

பரிகசித்துச் சிரிக்கத் தொடங்கின

*****

No comments:

Post a Comment

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை!

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை! ஔவைக்கு நூலறிவு மட்டும் கிடையாது. அவரது பட்டறிவுக்கு எல்லையே கிடையாது. ஒரு பெண்ணாகச் சுதந்த...