21 Mar 2023

13 லிருந்து 39 வரை

பொட்டை

இங்கும் அங்கும்

அங்கும் இங்கும்

எங்கும்

எப்படியெப்படியோ அலைந்து பார்க்கிறது

நாய்க்குட்டி

தூக்குவார் இல்லை

அதைச் சொல்வதா

யாரைச் சொல்வது

பொட்டை என்ற

*****

13 லிருந்து 39 வரை

மினுக்கி மினுக்கி வரும்

மின்சாரத்தை நம்ப முடியாது

வந்தாலும் வந்ததுதான்

போனாலும் போனதுதான்

மைனர் குஞ்சு சொல்வதைக் கேட்டு

அர்த்த புஷ்டியுடன் சிரித்துக் கொண்டவர்கள்

இந்தத் திருவிழாவிற்கு இது போதுமென்று

எழுந்து செல்கிறார்கள்

முப்பத்து ஒன்பதாகியும்

முதிர் கண்ணன்களாய் நிலைத்து விட்ட

மைனர் குஞ்சு உட்பட பதின்மூன்று பேர்

*****

மறந்து விடும் பழக்கம்

இதோ இப்போதோ

இன்னும் கொஞ்சம் காலம் கடந்தோ

அல்லது

சற்று நேரத்திலோ

அதுவும் தப்பிப் போனால்

சில நாட்களிலோ

அதுவும் தப்பிப் போனால்

சில வாரங்களிலோ மாதங்களிலோ

மழையைத் திட்டியவர்களும்

மழையைச் சபித்தவர்களும்

வீதியில் இறங்கி நடந்து கொண்டிருப்பார்கள்

மழையைப் பற்றிய பிரக்ஞையின்றி

மறுபடியும் திட்டும் சாபமும் வாங்க

மழை வரக் காலமாகும் வரை

மழையை வாழ்த்துவதை விட்டு விடலாம்

மழையை நினைக்க யார் இருக்கிறார்கள்

விருந்தோம்பும் பழக்கம் உள்ளவர்கள்தான் என்றாலும்

வந்தால் நினைப்பவர்கள்

வராமல் போனால் மறந்து விடுவார்கள்

*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...