14 Feb 2023

நியாயத்தின் பக்கம் நிற்றல்

நியாயத்தின் பக்கம் நிற்றல்

ஒவ்வொரு பக்கமும் ஒவ்வொரு நியாயம் இருக்கிறது

ஒரு நியாயம் அதை உண்மை என்கிறது

மற்றொரு நியாயம் பொய் என்கிறது

ஒரு நியாயத்தின் படி விஷம் என்பது விஷம்

மருந்தென்பது மருந்து

இன்னொரு நியாயத்தின்படி

விஷம் என்பது மருந்து

மருந்தென்பது விஷம்

ஒன்றை அப்படியே வைத்திருக்கும் நியாயங்களுடன்

ஒன்றை இன்னொன்றாக மாற்றும் நியாயங்களும்

மனிதர்களிடம் இருக்கின்றன

எந்த நியாயத்தைத் தேர்ந்து கொள்வது என்ற குழப்பம்

எல்லா காலத்திலும் இருந்து கொண்டிருக்கிறது

ஏற்றுக் கொள்வது ஒரு வகை நியாயம்

மறுப்பது வேறொரு வகை நியாயம்

எந்த நியாயத்தின் பக்கமும் நிற்கலாம்

எந்த நியாயத்தையும் நியாயப்படுத்திக் கொள்ளலாம்

உங்கள் நியாயம் குறைந்தபட்சம்

உங்கள் மனதுக்கேனும் உறுத்தாமல் பார்த்துக் கொள்ளுங்கள்

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...