14 Feb 2023

என்றனர் ஆய்வாளர்கள்

என்றனர் ஆய்வாளர்கள்

தோண்ட தோண்ட

பிள்ளைகளின் எலும்புக்கூடுகள்

கொத்துக் கொத்தாக வந்தன

முன்னொரு காலத்தில்

உறைவிடப் பள்ளியொன்று இருந்த இடம்

என்றனர்

தொல்பொருள் ஆய்வாளர்கள்

*****

புதிய மாவை அரையுங்கள்

அரைத்த மாவையே

அரைத்துக் கொண்டிருப்பதாகச் சொல்கிறார்கள்

நேற்று அரைத்த மாவு

அது நேற்று அரைத்தது

இன்று அரைக்கின்ற மாவு

அது இன்றைய மாவு

ஒவ்வொரு நாளும் புதிய மாவுதான்

நீங்கள் உங்கள் மன இயந்திரத்தில்

பழைய மாவை அரைத்துக் கொண்டிருந்தால்

புதிய மாவும் பழைய மாவாகி விடும்

தயவு செய்து புதிய மாவை அரையுங்கள்

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...