15 Feb 2023

முன்னெப்போதும் சொல்லாத கதை

முன்னெப்போதும் சொல்லாத கதை

இந்த முன்னிரவில் சொல்ல

உனக்கெனச் சில கதைகளைச் சேர்த்து வைத்தேன்

பாதி கதை சொல்லி முடிப்பதற்குள்

உறக்கத்தின் விளிம்பில் சொன்னாய்

மீதிக் கதையைக் கனவில் கேட்டுக் கொள்கிறேன் என்று

உன் கனவுக்குள் நான் வருவதெப்படி

கனவுக்குள் நீயிருந்து கதை கேட்பதெப்படி என

உறக்கம் வராத பின்னிரவு வரை யோசித்துக் கொண்டிருந்தேன்

பிறகெப்படி உறங்கிப் போனென்று தெரியாது

கண்ணயர்ந்துப் போனேன்

காலையில் எழுந்ததும்

கனவில் கேட்ட மீதி கதை அற்புதம் என்றாய்

கனவில் நான் சொன்ன மீதிக் கதை

என்னவென்று புரியாமல் நான் குழம்பி நின்றேன்

கனவில் கேட்ட மீதிக் கதையை

நீ சொல்ல ஆரம்பித்தாய்

நான் முன்னெப்போதும் சொல்லாத கதையை

கதை சொல்லும் உன்னிடம் கேட்டுக் கொண்டிருந்தேன்

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...