2 Feb 2023

காற்றில் உலவும் சங்கதிகள்

காற்றில் உலவும் சங்கதிகள்

நான் என்னதான் சொல்வது

எல்லாம் மறந்து போகிறது

சொல்ல வரும் வேளையில்

யாரும் இருப்பதில்லை

எல்லாரும் கூடி இருக்கும் வேளையில்

சொல்ல வருவதில்லை

எந்நேரமும் என்னுடன் இருந்தால்

சொல்ல வரும் நேரத்திலாவது சொல்லிவிடுவேன்

அதைவிட முக்கியமானது

கேட்க இருப்பவர்களுக்குப் பல இருக்கிறது

அவர்கள் போகிறார்கள்

அவர்கள் போன பின்னே

வார்த்தைகள் வரிசையாக வருகின்றன

அதனாலென்ன

பேசுவதையெல்லாம் அலைபேசியில் பதிவு செய்து

கேட்க முடியாதவர்களுக்காக வெளியிடுகிறேன்

அவர்கள் இப்போதும்

கேட்பதற்கு நேரமில்லை என்ற செய்தியை

எப்போதும் போல பின்னூட்டம் இடுகிறார்கள்

என்னதான் செய்தாலும்

என்னதான் வசதிகள் வந்தாலும்

கேட்பதற்கான கொடுப்பினை வருவதற்கும்

ஏதோ சில இருக்கத்தான் செய்கிறது

எப்போதாவது யாராவது வந்து கேட்கும் வரைக்கும்

காற்றில் உலவிக் கொண்டிருக்கட்டும்

கேட்பதற்கான கொடுப்பினை பெற்றவர்கள் வரும் வரைக்கும்

*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...