2 Feb 2023

கைப்பிடியளவு கடுகு வாங்கி வரச் சொன்ன புத்தர்

கைப்பிடியளவு கடுகு வாங்கி வரச் சொன்ன புத்தர்

புத்தர் அப்படிச் சொல்வார் என்று எதிர்பார்க்கவில்லை

குடித்துச் சாகாதவர் வீட்டிலிருந்து

கைப்பிடியளவு கடுகு வாங்கி வரச் சொன்னார்

யார் வீட்டில் குடித்துச் சாகாதவர் இருக்கிறார்

வீட்டுக்கு ஒருவர் குடித்துச் சாகத்தான் இருக்கிறார்

ஒன்றோடு போனதே அதிர்ஷ்டம் என்று

ஆறுதல் சொல்லத்தான் எல்லாரும் இருக்கிறார்

குடியால் சாவது ஒரு நிலத்தின் இயற்கை

குடியால் செத்தவர்களுக்கு

குடித்த படி பாடை கட்டிக் கூத்தாடி

இறுதி நல்லடக்கம் செய்வது ஒரு நிலத்தின் பண்பாடு

குடியால் மாண்டவருக்காகப்

புத்தரிடம் ஆறுதல் தேடுவது அறியாமை என்றான பிறகு   

குடியே சாவிற்குக் காரணம் என்றார் புத்தர்

அன்றைய கடைசிச் சொட்டு மதுவைக் குடித்தபடி

புத்தர் சொல்வதே சரியென்று

பாதம் பணிந்தபடி சென்று கொண்டிருக்கின்றனர் குடி மக்கள்

*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...