3 Feb 2023

அதது அப்படியப்படியே

அதது அப்படியப்படியே

நீ பிறப்பாய் சாவாய்

இருப்பாய் தொலைவாய்

உயிர்ப்பாய் மறைவாய்

விழிப்பாய் உறங்குவாய்

உண்பாய் பட்டினிக் கிடப்பாய்

அழுவாய் சிரிப்பாய்

அதனாலென்ன

சூரியனும் சந்திரனும்

பார்த்துக் கொண்டுதான் இருக்கும்

அவற்றுக்கென்ன

பார்த்துக் கொண்டுதான் இருக்கும்

பார்த்துப் பார்த்துச் சலிக்காமல்

பார்த்துக் கொண்டேயிருக்கிறதே

அதுதான் விசயம்

அது அற்றைத் திங்கள் அந்நிலவாவதும்

அற்றை நாள் அஞ்ஞாயிறாவதும்

உமக்கும் எமக்கும் நமக்கும்தான்

மற்றபடி என்ன

எப்போதும் அது நிலவுதான்

எப்போதும் அது ஞாயிறுதான்

போற்றினாலும் போற்றாவிட்டாலும்

பொங்கினாலும் பொங்கா விட்டாலும்

நிலவு நிலவுதான்

சூரியன் சூரியன்தான்

அதது அப்படித்தான்

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...