4 Feb 2023

ருசி மரணித்துப் போனவர்கள்

ருசி மரணித்துப் போனவர்கள்

ஒன்று இரண்டு மூன்று என்று

எடுத்து ஊற்றினால் வற்றிப் போய் விடும் ஊற்று

அடுத்து எடுத்து ஊற்றுவதற்கு

அந்த ஊற்றை நம்பித்தான் காத்திருக்க வேண்டும்

மீண்டும் ஒன்று இரண்டு மூன்று என்று

எடுத்து ஊற்றினால் வற்றிப் போய் விடும்

மீண்டும் நம்பிக்கையோடு காத்திருக்க வேண்டும்

எடுத்தெடுத்து ஊற்றி மறுபடியும் ஊறும் என

நம்பிக்கையோடு காத்திருப்பதுதானன்றோ

வாழ்க்கையெனும் ஊற்று

எவ்வளவு வேண்டுமானாலும் எடுத்து ஊற்றலாம்

நம்பிக்கையோடு காத்திருந்து காத்திருந்து

எடுத்து எடுத்து ஊற்ற வேண்டும்

காத்திருக்க விருப்பம் இல்லாதவர்கள்

பாட்டில் தண்ணீரையோ கேன் தண்ணீரையோ

வாங்கி வாங்கி ஊற்றலாம்

ஊற்று நீரின் ருசியும்

காத்திருப்பு தரும் சுவையும்

வாங்கிக் கொடுக்கும் நீரில்

இல்லாது போகும் அதிசயத்தை

யார்தான் ஊன்றி கவனித்துக் கொண்டிருக்கப் போகிறார்கள்

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...