4 Feb 2023

குழந்தைகள்தான் வசதியானவர்கள்

குழந்தைகள்தான் வசதியானவர்கள்

குழந்தைகள்தான் அடிப்பதற்கு வசதியானவர்கள்

குழந்தைகள்தான திட்டுவதற்கு வசதியானவர்கள்

குழந்தைகள்தான் கோபப்படுவதற்கு வசதியானவர்கள்

யார் சொன்னாலும் சொல்லாவிட்டாலும்

அது மட்டும் அப்படித்தான்

மற்றும் யார் சொன்னது யார் சொல்லாமல் விட்டது

குழந்தைகள்தான் முத்தம் கொடுப்பதற்கு வசதியானவர்கள்

குழந்தைகள்தான் கொஞ்சுவதற்கு வசதியானவர்கள்

குழந்தைகள்தான் அன்பு செய்ய வசதியினவர்கள்

குழந்தைகள்தான் குலாவுவதற்கு வசதியானவர்கள்

குழந்தைகள்தான் விளையாடுவதற்கு வசதியானவர்கள்

குழந்தைகள்தான் மகிழ்ச்சியாக இருப்பதற்கு வசதியானவர்கள்

குழந்தைகள்தான் காலத்தை மறக்கவும் மற்றும்

இருப்பைத் துறக்கவும் மற்றும் எல்லாவற்றுக்கும் வசதியானவர்கள்

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...