7 Feb 2023

அற்புதங்களை நிகழ்த்துதல்

அற்புதங்களை நிகழ்த்துதல்

அந்தப் பொழுதில்

ஏதோ சொல்லப்பட்டது

ஏதோ நிகழ்த்தப்பட்டது

அர்த்தங்கள் செய்து கொண்டது அவரவர்கள்

அர்த்தப்படுத்திக் கொண்டதன் வழியாக

மீண்டெழுந்தது

சொல்லப்பட்டதும் நிகழ்த்தப்பட்டதும்

பிறகது அற்புதமாய் வியாபித்துக் கொண்டது

அந்த அற்புதத்தை நிகழ்த்திப் பார்க்க

ஆளாளுக்கு முயற்சித்துப் பார்க்க

எந்த முயற்சியும்

முன்னர் அர்த்தப்படுத்திக் கொண்டதற்கு நிகராக

நிகழாமல் போக

அற்புதங்களுக்கான முயற்சிகள்

ஆண்டாண்டுகளாகத் தொடர்கின்றன

யாரேனும் ஒருவர்

திடீரெனப் புறப்பட்டு

அர்த்தப்படுத்திக் கொண்டதை மாற்றலாம்

அப்போது புதிய அற்புதங்கள் நிகழலாம்

அற்புதங்களில் என்ன இருக்கிறது

அர்த்தப்படுத்திக் கொள்வதில்தான் எல்லாம் இருக்கிறது

*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...