8 Feb 2023

கால நதியை வேடிக்கை பார்த்தல்

கால நதியை வேடிக்கை பார்த்தல்

இது இன்றைய நாளோடு முடிந்து விடக் கூடும்

நாளை வேறொன்றாகத் தொடரக் கூடும்

வேறொரு நாளாக மாறி விடவும் விடும்

முந்தைய தினத்தின் நினைவுகள்

நேற்றை இன்றும் வேண்டும் என வேண்டக் கூடும்

நாளையும் அப்படியே வேண்டும் எனவும் மன்றாடவும் கூடும்

காலமென்ன இயந்திரமோ

கைகளுக்குக் கட்டுப்பட்டு இயங்காமல் போகக் கூடும்

ஒவ்வொரு நாளிலும் சலிப்பு மட்டும்

ஒரே மாதிரியாக இருப்பதாகத் தோன்றக் கூடும்

ஒவ்வொரு நாளின் சலிப்பும்

ஒவ்வொரு மாதிரி

சலிப்பை கவனிப்பதில்லை என்பதைக் கவனிக்காதிருக்கக் கூடும்

விருப்பமானவற்றை மட்டும் கொடுக்க

காலம் கற்பக விருட்சத்தின் நகலாகுமோ

சாத்தானின் விருட்சமாகி

விலக்கப்பட்ட கனிகளைக் கொடுக்காமல் இருக்குமோ

காலம் கைநீட்டித் தரும் கனிகளை

புசிப்பதும் புசிக்காமல் இருப்பதும்

ஆசையின் சூலினுக்குள் இருக்கும் சூட்சமம்

சூலுக்குள் விழும் மகரந்தத்திற்கேற்ப

காலம் நதியைப் போலாகிப்

புசித்தவர்களை இழுத்துச் செல்லக் கூடும்

புசித்தலின் விருப்பமற்றவர்கள்

காலந்தோறும் கரையோரம் நின்று

கால நதியை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கக் கூடும்

*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...