7 Feb 2023

வெடிக்கும் பொழுதின் வெளிச்சங்கள்

வெடிக்கும் பொழுதின் வெளிச்சங்கள்

ஒரு பொழுது

எல்லாவற்றையும் உடைத்துப் போட்டு விடும்

எல்லாருக்கும் அப்படி

ஒரு பொழுது இருக்கிறது

ஞானவான்களாக ஆகத் துடிப்பவர்கள்

அந்தப் பொழுதைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள்

தேடாமல் இருப்போருக்கும்

அந்த ஒரு பொழுது வரத்தான் போகிறது

காலப் பெருவெளியின்

ஒரு பொழுதில்

எல்லாம் உடைந்துச் சிதற வேண்டியவைதான்

உன்னைத் தேடிக் கொண்டு வரப் போகும்

ஒரு பொழுதை

நீ தேடிக் கொண்டு அலைய வேண்டியதில்லை

வெடிக்கப் போகும் வரை திருப்தியாக இரு

வெடித்தப் பின்னும் அப்படித்தான் இருக்கப் போகிறாய்

வெடிப்பது என்பது ஒரு நிகழ்வு

அது நிகழும் போது நிகழ்ந்து விட்டுப் போகட்டும்

வெடிப்பதை வெளிச்சம் போட்டுக் காட்ட

என்ன இருக்கிறது

வெடிக்கும் போது அதுவே

வெளிச்சம் போட்டுக் கொள்ளும்

கடக்காது தவிர்த்தாலும்

ஒவ்வொரு பொழுதும் கடந்து கொண்டுதான் இருக்கும்

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...