5 Feb 2023

பிரக்ஞையற்றுப் போகும் நிலம்

பிரக்ஞையற்றுப் போகும் நிலம்

பாட்டன் முப்பாட்டன் காலத்தில்

மொச்சை தட்டை துவரை அவரை

கத்தரி இஞ்சி மஞ்சள் புடலை

கருணை சேப்பம் சவாரி கிழங்கு

பரங்கி பூசணி சுரை பாகல்

மல்லி மிளகாய் தக்காளி பப்பாளி

நாரத்தை எலுமிச்சை மாதுளம் சீத்தா என்று

எவ்வளவோ விளைவித்துத் தந்திருக்கிறது நிலம்

பாட்டன்களும் முப்பாட்டன்களும் காலமான பிறகு

அப்பன்கள் காலத்தில்

நெல்லும் உளுந்தும் பயிறும் தவிர்த்து

வேறு அறியா நிலங்களாயின

மகன்கள் காலத்தில் அதுவுமின்றி

கட்டடங்களும் கழிவு நீரும் தவிர

வேறு அறியா நிலங்களாயின

பேரன்கள் காலத்தில்

எதுவும் அறியா நிலங்களாகலாம்

எது பற்றியும் கவலையின்றி

கட்டடங்கள் மேலும் ஒரு விதை

எல்லா காலத்திலும் முளைக்கத்தான் செய்கிறது

நிலம் குறித்த பிரக்ஞையின்றி

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...