6 Feb 2023

பெயர் மாறும் பேருந்து நிறுத்தங்கள்

பெயர் மாறும் பேருந்து நிறுத்தங்கள்

கேணிக்கரையின் பெயர் அழித்து

வாள்பட்டறை ஸ்டாப்பிங்காகி விட்டது

எங்கள் ஊர் பேருந்து நிறுத்தம்

தண்ணீரில் மூழ்கி நீரெடுத்து வந்த குடங்கள்

குப்பையில் மூழ்கி விட்ட கேணியை

வெறுமையாகப் பார்த்துக் கொண்டு

பஞ்சாயத்துப் பைப்பில் நீரெடுத்துச் செல்கின்றன

நல்லதங்காள் இன்றிருந்தால்

பாவம் கேணியில் போடும் குழந்தைகளை

குப்பைத் தொட்டியில் போட்டு விட்டுப் போயிருப்பாள்

கிணறுகள் அற்றுப் போய் விட்ட போதும்

ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து விட்ட

குழந்தைகளைப் பற்றிய செய்திகள் வரும் போதெல்லாம்

நல்லதங்காள்கள் மீண்டும் மீண்டும் பிறந்து வருகிறார்களோ என்று

அனிச்சையாய் எண்ணத் தோன்றுகிறது

வாள்பட்டறை ஸ்டாப்பிங் என்ற பெயரும்

எத்தனை நாள் நிலைத்து நிற்கப் போகிறது

மரங்கள் அற்றுப் போய் விட்டால்

தண்ணீருக்காக ஆழ்துளைக் கிணறு தோண்டினால்

போர்வெல் ஸ்டாப்பிங் என்ற கூட

பெயர் மாறிப் போகலாம் வருங்காலத்தில்

எங்கள் ஊர் ஸ்டாப்பிங்

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...