3 Feb 2023

ஒழுங்கு நாடகம் ஆடுவோர் கவனத்துக்கு

ஒழுங்கு நாடகம் ஆடுவோர் கவனத்துக்கு

இதற்கு மேல் முடியாது எனும் போது

மூச்சு முட்டியா இறந்து போக முடியும்

சற்றேனும் ஓய்வு கொள்ள வேண்டும்

முடிந்தது முடித்ததையெல்லாம் மறந்து போக வேண்டும்

ஓய்வு கொள்ளுதலில் அலுப்பு ஏற்படும் போது

இதற்கு மேல் முடியாதெனத் தோன்றும் வரையில்

செய்து கொண்டிருக்க வேண்டும்

மீண்டும் ஓய்வு மீண்டும் செய்கை என்றில்லாமல்

சில முறை எங்கேயாவது ஓடிக்

காணாமல் போகத்தான் வேண்டும்

எல்லாரும் தேடி முடித்துக் களைத்த பிறகு

எல்லார் முன்னும் தோன்றத்தான் வேண்டும்

உன் கைப்பிடி என் கைப்பிடி எல்லாரின் கைப்பிடி என்று

யாருடைய கைப்பிடிக்குள்ளும் அடங்காதது வாழ்க்கை

என்பதைச் சொல்லிச் சொல்லிச் சிரித்துதான் ஆக வேண்டும்

நேற்று கண்ணில் பட்டவரா

இன்று காணாமல் போய் விட்டார் என்று

எல்லாரும் பேசத்தான் வேண்டும்

போனவர் போனவர்தான் என்று

இருப்பவர் எல்லாம் எப்போதும் போவார் என்று

இருப்பவரைப் பற்றியும் பேச வேண்டும்

இருப்பவர் போகுபவர் என்பதெல்லாம்

பேசுவதிலும் சொல்வதிலும் இருக்கிறதா என்று

அதையும் சொல்லிச் சொல்லிச் சிரிக்க வேண்டும்

எல்லா அபத்த நாடகமும்

வாழ்க்கை என்ற பெயரிலன்றோ நடந்து கொண்டிருக்கிறது

என்பதை எல்லார் அறிய ஒரு முறையேனும் சொல்ல வேண்டும்

குறிப்பாக ஒழுங்கு நாடகம் ஆடுவோர் முன்னிலையில் ஒரு முறையேனும்

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...