8 Feb 2023

ஒரு கணமேனும் ஏன் உணர்ந்து கொள்ளக் கூடாது

ஒரு கணமேனும் ஏன் உணர்ந்து கொள்ளக் கூடாது

இந்தக் கணத்தை

இனிமையாக்க

எதுவும் செய்வதற்கில்லை

ஏனென்றால்

இந்தக் கணமே

இனிமையாகத்தான் இருக்கிறது

இனிமையாக இருக்கும் இனிமை

எப்போதும்

இனிமையாகத்தான் இருக்கிறது

உருவாக்கப்படும் இனிமைகள்

ஒரு கணத்தில்

திகட்டிப் போகின்றன

இனிமையாக ஏதோ ஒன்று கேட்பதற்கு முன்

இனிமையாக இருப்பதைப் பார்

இனிமையற்று ஏதுமில்லாத போது

நீ எப்படி இனிமையைக் கேட்க முடியும்

இனிமைக்குள் இருந்து கொண்டு

இனிமையைக் கேட்பாயானால்

உன்னை என்ன சொல்வது

உன்னைச் சுற்றியிருக்கும் இனிமையை

உணர்ந்து கொள்

யாரிடமும் போய் நின்று

இனிமையை யாசித்துக் கொண்டிராதே

இல்லாததை யாசிப்பதில் நியாயமுண்டு

இருப்பதை யாசிப்பதில் என்ன உண்டு

உன்னை அறியாமல் ருசித்துக் கொண்டிருக்கும்

இனிமையை

அறியத்தான் வேண்டும் என

அடம் பிடிப்பதற்கு முன்

ஒரு கணமேனும்

நீயேன் உணர்ந்து கொள்ளக் கூடாது

*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...