9 Feb 2023

பார்த்தலின் சுதந்திரம்

பார்த்தலின் சுதந்திரம்

ஏதும் எதிர்பார்க்கச் சொல்லாதீர்கள்

எப்போது எது நடக்கும் என்று

எதிர்பார்க்க முடியாமல்

எதிர்பார்ப்பின் கரைகளில்

வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்

தயவுசெய்து சொன்னால் நம்புங்கள்

வேடிக்கை பார்ப்பது

எதையும் எதிர்பார்த்தன்று

அது வெறுமனே பார்ப்பது

பார்க்கையில் அபூர்வங்கள் சிக்குவதும்

சிக்காமல் போவதும்

பார்ப்பவரின் கையில் இல்லை

அபூர்வங்களுக்குள் சிக்காமல் இருந்தால்

எல்லாரும் பார்க்கலாம்

பார்த்துக் கொண்டே இருக்கலாம்

ஏமாற்றங்கள் ஏதுமின்றி

வாழ்நாள் முழுவதும் பார்த்துக் கொண்டிருக்கலாம்

எந்த விதச் சலிப்புமின்றி

எப்போதும் பார்த்துக் கொண்டே இருக்கலாம்

அவரவர் பார்ப்பது

அவரவர்களிடம் இருக்கிறது

எப்படி வேண்டுமானாலும் பார்க்கலாம் என்பது

அவரவருக்கான சுதந்திரம்

வெறுமனே பார்ப்பது மட்டுமே

பார்ப்பதில் உள்ள சுதந்திரம்

*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...