12 Feb 2023

பாவங்களின் செரிமானம்

பாவங்களின் செரிமானம்

ஒவ்வொரு முறை

பிராய்லர் கோழிகளின் கழுத்தறுப்பவனுக்கு

கிடாய்களின் சிரம் கொய்பவனுக்கு

உறுத்தல்கள் ஏதுமில்லை

உயிர் மீன்களை வலையில் அள்ளி

சவமாக்குபவனுக்கு

அது குறித்த வருத்தங்கள் ஏதுமில்லை

யாரோ ஒருவர் உணவுக்கென

வாங்க வரும் காலடிச் சத்தம்

கேட்கத் துவங்கும் போது

கத்திகள் கூர் தீட்டப் படுகின்றன

அரிவாள்கள் துலக்கம் கொள்கின்றன

வலைகள் நீர் நிலைகளை நோக்கி விரைகின்றன

ருசியான சதைப் பிண்டத்தை

எச்சில் சொட்ட சொட்ட

உண்ட பின் கொன்றதன் பாவங்கள்

செரிக்கப்பட்டு விடுகின்றன

சத்தான கீரைச் செடியின்

உயிரைப் பிடுங்கிய பாவங்கள் உட்பட

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...