புனைகதைக்குள் பொருந்திப் போனவன்
ஒரு புனைகதைச் சொன்னால்
அதில் பொருத்திக் கொள்ள தயாராக
இருப்பதாகச் சொன்னவனைப் பார்த்து
கதாசிரியன் ஆச்சரியப்பட்டுப்
போனான்
அவனுக்கென ஒரு கதைச் செய்து
அதில் பொருத்திக் காட்டினான்
கதைக்குள் வளைந்து நெளிந்து
பாம்பைப் போல வளைய வந்தவன்
படம் எடுத்து ஆடத் தொடங்கினான்
பார்ப்பவர்கள் கைதட்ட கைதட்ட
ஆக்ரோஷமாய்ப் படம் எடுத்தவன்
திரைக்கு முன் விழுந்த சில்லரைகளைப்
பார்த்து
கைத்தட்டலுக்கும் சில்லரைக்கும்
ஏற்ப
விதவிதமாக ஆடத் தொடங்கினான்
பார்த்துக் கொண்டிருந்த கதாசிரியன்
தன்னுடைய புனைக்கதையைத் தேடத்
தொடங்கினான்
புனைக்கதைக்குள் பொருத்திக்
கொண்டவனுக்கு
அதன் பிறகு கதாசிரியன் தயவு
தேவைப்படவில்லை
*****
No comments:
Post a Comment