9 Feb 2023

உலவும் நம்பிக்கைகள்

உலவும் நம்பிக்கைகள்

நிறைய வேலை செய்து

நீர்த்துப் போய் விட்டவர்

வாழ்வின் கடைசியில்

கொஞ்சமாக எதிர்பார்த்தது

கொஞ்சமே கொஞ்சம் ஓய்வு

சுற்றும் பூமிக்கென்ன ஓய்வு

சுடும் சூரியனுக்கென்ன ஓய்வு

வீசும் காற்றுக்கென்ன ஓய்வு

ஓடும் நதிக்கென்ன ஓய்வு என்றவர்கள்

காவல்காரருக்கான உடையை மாட்டி விட்டு

நடுநிசியில் கட்டிடக்காடுகளிடையே உலவ விட்டார்கள்

கரும்புக்காட்டில் உலவி ஊளையிடும் நரியைப் போல

ஊதலை ஊதிக் கொண்டு

உலவிக் கொண்டிருந்தவர்

ஒரு பொழுதில் சிலையாய் ஓய்ந்து நின்றதும்

கருப்பன் என்றார்கள்

வீரன் என்றார்கள்

குலசாமி என்றார்கள்

இப்போது குலசாமியின் சீருடையை அணிந்து கொண்டு

இன்னொரு வயதானவர் உலவிக் கொண்டிருக்கிறார்

ஒருநாள் கருப்பனாகவோ வீரனாகவோ குலசாமியாகவோ

ஆகி விடும் நம்பிக்கையில்

*****

No comments:

Post a Comment

ஆசைகளை அரித்த கறையான்

ஆசைகளை அரித்த கறையான் சிறுக சிறுக சேர்த்த பணம் ஒவ்வொரு நாளாய்ச் சேர்த்த பணம் வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி மிச்சப்படுத்திச் சேர்த்த ப...