24 Feb 2023

அழுகையின் ஊடே அனுப்பப்பட்டவர்

அழுகையின் ஊடே அனுப்பப்பட்டவர்

பிரசவமான குழந்தை எவ்வளவு அழுதும்

கருவறைக்குள் அனுப்ப

அந்தத் தாதி தயாராக இல்லை

பள்ளிக்குச் சென்ற போதும்

அழுத அந்தக் குழந்தையை

வீட்டிற்கு அழைத்து வரத் தாய் தயாராக இல்லை

வளர்ந்த பின்பு வெளிநாடு செல்ல நேர்ந்த போதும்

அழுத அப்பெரிய குழந்தையை

உன் தேசத்திலே இரு என்று சொல்ல யாரும் தயாராக இல்லை

மேலும் வளர்ந்து சருமம் தளர்ந்து முடிகள் வெளுத்து

முதியோர் இல்லம் செல்ல அழுத போதும்

நீ கட்டிய வீட்டிலேயே இரு என்று சொல்ல யாரும் தயாராக இல்லை

கடைசியாக உயிர் மூச்சை உதிர்த்து

இகலோகம் விட்டு பரலோகம் சென்ற போது

அந்தக் குழந்தை அழவில்லை

அந்தக் குழந்தை இன்னும் கொஞ்ச நாள்

இங்கே இருந்திருக்கலாம் என எல்லாரும் அழத் தொடங்கினர்

*****

No comments:

Post a Comment

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை!

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை! ஔவைக்கு நூலறிவு மட்டும் கிடையாது. அவரது பட்டறிவுக்கு எல்லையே கிடையாது. ஒரு பெண்ணாகச் சுதந்த...