23 Feb 2023

அள்ள முடியாத காலம்

அள்ள முடியாத காலம்

இப்படிதான் என்று முடிவு கட்டி விடாதீர்கள்

இப்படியில்லை என்றால்

அப்படிதான் என்றும் தயவு செய்து முடிவு கட்டி விடாதீர்கள்

எது எப்போது எப்படி என்பது

அந்தந்த கணத்தில் தீர்மானமாகின்றன

ஒரு கணத்தின் சாத்தியக்கூறுகளை

மனதின் சின்ன கணக்கீட்டில் சுருக்கிட முடியாது

ஒரு சுருக்குப் பையில் ஒளிந்து கொள்ளும் அளவுக்கு

காலம் இன்னும் கோழையாக வில்லை

காலத்தின் வீரத்திற்கு முன்பு நாம் தூசுக்கள்

சுனாமி அதற்குக் கைக்குட்டையைப் போன்றது

பூகம்பம் அதற்குப் புரண்டு படுப்பது போன்றது

புயல் அதற்குக் காது குடைவதைப் போன்றது

இடியும் மின்னலும் அதற்கு மந்தகாச சிரிப்பைப் போன்றது

எழுதி வைக்கப்பட்டிருக்கும் காலம்

கடற்கரையின் ஒரு மணல் அளவு

எழுதப்பட வேண்டிய காலம்

கடற்கரையின் மொத்த மணல் அளவு

காலத்தைக் கையில் அள்ளியது போலத் தோன்றலாம்

அள்ள முடியாத காலம் வெளியெங்கும் நிறைந்து கிடக்கிறது

*****

No comments:

Post a Comment

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை!

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை! ஔவைக்கு நூலறிவு மட்டும் கிடையாது. அவரது பட்டறிவுக்கு எல்லையே கிடையாது. ஒரு பெண்ணாகச் சுதந்த...